பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காயன்கேணி பொதுக்கிணறு பொது மக்கள் பாவனைக்கு கையளிக்கும் சம்பவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றது.
இலங்கையில் நிகழும் பொருளாதார நெருக்கடியிலும் சர்வத்தின் தொண்டர்களின் சேவை மிகவும் பாராட்டுதலுக்குரியது.
நெடு நாட்களாக மிகவும் கடின உழைப்புடன் இக் கிணற்றுக்குத் தேவையான அனைத்துப் பத்திரங்களையும் நேர்த்தியாகப் பூர்த்தி செய்து தொழில்
நுட்பவியலாளர் குழுவின் சிபார்சுகளுடன் இணைந்து சிறப்பாக ஒழுங்குகளைச் செய்த சர்வத்தின் மட்டக்களப்பு பிரதிநிதி சுரேசுக்கும் கட்டட உரிமம் பெற்ற கிணற்றின் கட்டுவேலைகளுக்கான மேற்பார்வையாளராகவும் குடிநீரை இருமுறை இலவசமாகமும் பரிசோதித்து உதவிய கலாதீபனுக்கும் சர்வத்தின் குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக்க இரவு பகலாகப் பாடுபடும் நாதன் அண்ணாவுக்கும் இக் கிணறு கட்டுவதற்கான பெருந் தொகையை நன்கொடையாக வழங்கிய தாராள மனம் படைத்த நன் கொடையாளருக்கும் சர்வத்தின் பணிவான நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் . இக் காணொளி, புகைப்படங்கள் ஊடாக எங்களையும் பொங்கலுண்ண வருமாறு காயன்கேணி மக்கள் வெகு விரைவில் அழைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அடுத்த கிணற்றுக்கான திட்டங்களுடன் வெகு விரைவில் மீண்டும் சர்வம் உங்களை நோக்கி வரும் என்பதனைத் தெரிவிக்கின்றோம் .